இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

தேர்தல் வந்தாச்சு........!!!

Go down  Message [Page 1 of 1]

தேர்தல் வந்தாச்சு....

யார் கெட்டால் நமக்கென்ன? நாடு என்ன செய்தது எனக்கு என்று பொறுப்பற்று பேசுவதை நிறுத்திவிட்டு, நம் நாடு நம் கடமை என்ற எண்ணம் வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி ஒரு பக்கம். தேர்தல் பிரச்சார சூடு ஒரு பக்கம். இவ்வளவு நாள் கொள்ளையடித்த பணத்தை வாக்குக்காக அரசியல்வாதிகள் தண்ணியாய் விரயம் செய்வது ஒரு பக்கம். எல்லாம் ஒரு பக்கம் ஒதுங்கி இருக்கட்டும். குறை சொல்லவதை குறைத்துவிட்டு, குறையை நிவர்த்தியாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உங்களுக்கு தெரியுமா? இந்த அரசியலுக்காக ஏகப்பட்ட யாகங்களும்,பூஜைகளும் நடக்கின்றன.

ஒரு கிரிக்கெட் மேட்ச்-க்காகவே யாகம் வைக்கிற பரிதாபமான நாட்டில் நாம் வாழ்கிறோம்.

கிறிஸ்தவர்களான நாம் 'வோட்டு' போடுவது நம் கடமை, அதை இயேசுவும் விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
" இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்". மத்தேயு 22 :21

வோட்டு போடுவது மாத்திரம் நம் கடமை அல்ல. தேர்தலுக்காகவும்,நம் தலைவர்களுக்காகவும் ஜெபிப்பது கிறிஸ்தவர்களான நம் தலையாய கடமை.
உண்மையான தேவனை ஆராதிக்கிறவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டும் தான். அப்படியானால் நாம் ஜெபிக்காமல் எத்தனை பூஜைகளும், யாகங்களும், பில்லி சூனியங்களும், ஒதுதல்களும் நடந்தும் பயன் என்ன?

ஜெபமே ஜெயம். கிறிஸ்தவர்கள் எந்த கட்சியையும் சார்ந்து நிற்க தேவையில்லை. ஆனால் கட்சி சார்பற்று நல்லாட்சி அமைய நாம் ஜெபிப்பது அதிக அவசியம். அப்பொழுது தான்,பிதாவின் திட்டம் நிறைவேறும்.

நாம் இந்த தமிழக தேர்தல் முடியும் வரை ஜெபிக்க வேண்டிய குறிப்புகளை கொடுத்திருக்கிறேன். தினமும் எல்லா குறிப்புகளுக்காகவும் ஜெபித்தாலும் சரி, தினம் ஒரு குறிப்புக்காக ஜெபித்தாலும் சரி. ஆனால் கருத்தாய் ஜெபிக்க வேண்டும்.
நாம் ஜெபத்துக்கு அதி பயங்கர வல்லமை உண்டு. நம் ஆண்டவர் 'இராஜாக்களை தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகிற தேவன்'. 'அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளை இட நிற்கும்'.

அவர் நம் தலைவர்களை தம் விருப்பத்தின்படி ஆட்சியில் அமர்த்த நம் ஜெபத்தை நாடுகிறார். வாருங்கள்! ஜெப குறிப்புக்குள் செல்வோம். உங்களுக்கு இதற்கு மேலும் ஏதாவது ஜெப குறிப்புகள் தெரிந்தால், பதில் எழுதலாம்.

1. ஒவ்வொரு தமிழ் குடிமகனும் கடமையுணர்வுடன், கிறிஸ்தவர்கள் ஜெபத்துடன் வாக்களிக்க வேண்டும்.

2 . தேர்தல் நாளில் எந்த வன்முறையும் நடக்காமல் இருக்க

3 . அரசியல் கட்சிகள் பணம், இலவச பொருட்கள் கொடுத்து வாக்குகள் சேகரிக்காமல் இருக்க. மக்கள் அதை மறுக்க.

4 . தேர்தலுக்காக நடக்கும் யாகங்கள், பில்லி சூனியங்கள், பூஜைகள், ஒதுதல்கள் எல்லாம் நிறுத்தப்பட,இதன் மூலமாய் ஆளுகை செய்யும் பிசாசின் ஆளுகை கட்டப்பட

5 . கள்ள வோட்டு போடமால் தவிர்க்க

6 . ஆளுகைக்கு வரும் கட்சி நல்ல பயன் உள்ள திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த

7 . 'டாஸ்மாக்'(டாஸ்மாக்-தமிழ்நாடு பிராந்தி கடை) கடைகள் வருகிற அரசால் நிரந்தரமாய் மூடப்பட.

8 . கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்செயல்கள் ஒழிந்து, பாதுக்காப்பு கிடைக்க. இதன் மூலமாய் இயேசுவை தமிழகம் முழுவதும் ஏற்றுக்கொள்ள.

9 . குறைந்தது 10 இரட்சிக்கப்பட்ட அபிஷேகம் பெற்ற M .L .A -க்களாவது சட்டமன்றத்தில் பங்குபெற. அங்கே அவர்கள் தங்களை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள.

10 . தகுதியான முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆட்சியேற்க.

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்". IIநாளாகமம் 7 :14


நாம் ஜெபித்து தேசத்தை காப்போம்! அது நம் கடமை!

உங்களோடு ஜெபத்தில் பங்கேற்கும்,
திருமதி. ஷர்லீனா பிரதீப்

View user profile

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum