அழகியபூமி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

புலம்பலின் சுவர்

Go down  Message [Page 1 of 1]

SherleenaPradeep



நன்றி: அனுதின மன்னா(anudhinamanna.net)
இயேசு தேவாலயத்தைவிட்டுப்புறப்பட்டுப்போகையில்,அவருடைய சீஷர்கள்தேவாலயத்தின்கட்டடங்களை அவருக்குக்காண்பிக்க அவரிடத்தில்வந்தார்கள். இயேசுஅவர்களை நோக்கி:இவைகளையெல்லாம்பார்க்கிறீர்களே,இவ்விடத்தில் ஒருகல்லின்மேல் ஒருகல்லிராதபடிக்குஎல்லாம்இடிக்கப்பட்டுப்போகும்என்று மெய்யாகவேஉங்களுக்குச்சொல்லுகிறேன் என்றார். -(மத்தேயு 24:1-2).

இயேசுகிறிஸ்துஒலிவமலையிலிருந்துசொன்ன இந்த முழுஅதிகாரமும் இரண்டாவதுமலைபிரசங்கம் என்றுஅழைக்கப்படுகிறது. இந்தவசனங்கள் மிகவும்முக்கியமானவை, ஏனென்றால்நான்கு சுவிசேஷங்களில்மூன்று சுவிசேஷங்களில்இந்த வசனங்கள்எழுதப்பட்டிருக்கிறது.(மத்தேயு 24, மாற்கு 13,14, லூக்கா21,22). இந்த வசனங்கள்கர்த்தரின்வாயிலிருந்து வந்த பெரிய(நீளமான) தீர்க்கதரிசனவார்த்தைகள் எனவும்கூறலாம்.
ஓலிவ மலையிலிருந்துநாம் நேராக பார்த்தால்தேவாலயம் வெகு தெளிவாககாணலாம். அப்போதிருந்ததேவாலயம், உலகஅற்புதங்களில் ஒன்றாகஇருந்தது. எல்லாவகையிலும் யூதர்கள்பெருமைபட்டுக் கொள்ளும்வண்ணம், அந்த தேவாலயகட்டிடம் சிறந்தகற்களினாலும்,காணிக்கைளினாலும்அலங்கரிக்கப்பட்டு(லூக்கா 21:5) கெம்பீரமாய்நின்றிருந்தது. அதைபார்த்துதான்இயேசுகிறிஸ்து'இவைகளையெல்லாம்பார்க்கிறீர்களே,இவ்விடத்தில் ஒருகல்லின்மேல் ஒருகல்லிராதபடிக்குஎல்லாம்இடிக்கப்பட்டுப்போகும்என்று மெய்யாகவேஉங்களுக்குச்சொல்லுகிறேன்' என்றார்.அந்த சமயம், சீஷர்களுக்குஅது எப்படிசாத்தியமாகும் என்றுயோசித்திருக்கலாம்.ரோமர்கள் கி.பி. 70ல்எருசலேமை பிடித்தபோது,அநேக யூதர்கள் அந்ததேவாலயத்தில் தஞ்சம்புகுந்திருந்தனர்.அப்போது அங்கிருந்தஎல்லாவற்றையும் எரித்தரோமர்கள்,தேவாலயத்திற்கும் தீவைத்தனர். தீ பற்றிஎரிந்தபோது, சுத்ததங்கத்தினால்செய்யப்பட்டிருந்தஅதனுடைய கோபுரத்தின்தங்கம் உருகிவழிந்தோடியது. அங்குதஞ்சம் புகுந்திருந்தயூதர்கள் எரிந்துசாம்பலாயினர். தங்கம்உருகி அந்த கட்டிடத்தின்கற்களில்வழிந்திருந்தமையால் ரோமஅதிகாரிகள், அந்ததங்கத்தை எடுக்க வேண்டி,ஒரு கல்லையும்வைக்காதபடி தங்கத்தைஎடுக்கும்படியாக ஒருகல்லின் மேல் ஒரு கல்இராதபடி, எல்லாவற்றையும்இடித்து போட்டனர். அந்தமுழு கட்டடிடமும் இருந்தஇடம் தெரியாதபடிஇடிக்கப்பட்டுபோயிற்று.
இயேசுகிறிஸ்து கூறினதீர்க்கதரிசனவார்த்தையின்படியேதீத்து இராயனால் கி.பி. 70ல்முழு எருசலேமும்தரைமட்டமாக்கப்பட்டது.அதில் இருந்த 16,00,000 யூதர்கள்கொல்லப்பட்டனர்.
மோரியா மலை என்றுஅல்லது ஆங்கிலத்தில் Temple Mountஎன்றழைக்கப்படும்இடத்தில் அமைந்திருந்தஅந்த தேவாலயம் ஏரோதுஅரசனால்கட்டப்பட்டதாகும்.சாலொமோன் இராஜா கட்டினதேவாலயம்நேபுகாத்தநேச்சாரினால்இடிக்கப்பட்ட பின்பு,ஏரோது இராஜாவினால் கி.மு.19-ல் இயேசுகிறிஸ்துஇருந்த காலத்தில் இருந்ததேவாலயம் கட்டப்பட்டது.அது இயேசுகிறிஸ்துவின்தீர்க்கதரிசனத்தின்படி,கி.பி. 70ல் தீத்துஇராயானால்இடிக்கப்பட்டது. இப்போதுமீந்திருப்பது,புலம்பலின் சுவர் எனஅழைக்கப்படும் Western Wallமட்டுமே ஆகும். இதுஆலயத்தின் சுவர் அல்ல,ஆலயத்தை சுற்றியிருந்தசுவராகும்.
இந்த மீதமிருக்கிறபுலம்பலின் சுவர்தேவாலயத்தின் ஒரு பகுதிஎன்பதால், யூதர்களுக்குமிகவும் பரிசுத்தமானஇடமாகும். அவர்களுக்குதேவாலயம் இல்லாததால்,அவர்கள் இந்த இடத்தில்கூடி தங்கள் வேதபுத்தகமாகிய தோராவைவாசிப்பதும், அந்தசுவரின் முன் நின்றுமுன்னும் பின்னும்ஆடினவர்களாக, தங்கள்ஜெபங்களைஏறெடுக்கிறார்கள்.அவர்கள் இன்னும் மேசியாவர காத்திருக்கிறார்கள்.மேசியா வந்து, தங்கள்தேவாலயம் கட்டிஎழுப்பப்பட வேண்டும்என்பதே அவர்களுடையஜெபமாக இருக்கிறது.
அந்த சுவரின்இடுக்குகளில்ஆயிரக்கணக்கான ஜெபவிண்ணப்பங்கள்வைக்கப்பட்டுள்ளன. எல்லாநாட்டை சேர்ந்தவர்களும்வந்து அந்த இடத்தில்தங்கள் விண்ணப்பங்களைவைக்கலாம்.
புலம்பலின் சுவரில்ஆண்களுக்கென்றுபிரத்யேகமாகஜெபிப்பதற்கு என்று ஒருபெரிய அறை சுவரை ஒட்டிஅமைக்கப்பட்டுளளது.அதில் பெண்கள்செல்வதற்குஅனுமதியில்லை. அங்குசெல்லும் எந்த ஆணும்தங்கள் தலையில் யூதர்கள்அணியும் தொப்பியைஅணிந்துதான் செல்லவேண்டும். பெண்கள்ஜெபிக்க அந்த சுவரிலேயேஇரண்டாக பிரிக்கப்பட்டு,ஒரு பக்கம் பெண்கள்ஜெபிக்கிறார்கள்.அவர்கள் கைகளில் ஒரு ஜெபபுத்தகம் இருக்கிறது. அதைஅந்த சுவரின் முன் நின்றுமுன்னும் பின்னும் ஆடிஆடி சொல்லிகொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அங்குசென்றிருந்தபோது, 13 வயதானஆண்மக்களை அங்குதேவனுக்குஒப்புக்கொடுக்கும்படிஅந்த இடமே பெரிய விழாகோலம் பூண்டிருந்தது.ஆனாலும் பெண்கள்(அம்மாமார்), தனியாகதான்நின்று அந்தகொண்டாட்டத்தைபார்க்கவேண்டியிருந்தது.
புலம்பலின் சுவரைஒட்டி, பெரிய இடம்ஆயிரக்கணக்கான யூதர்கள்வந்த ஜெபிக்கும்படியாகஒதுக்கப்பட்டள்ளது. ஆந்தஇடத்தின் சுவரில் ஆறுகறுப்பு நிற விளக்குகள்தாவீதின்நடசத்திரத்துடன்தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. அதுஎன்ன என்று கேட்டபோது,ஹிட்லரின் காலத்தில்அவனால் கொல்லப்பட்ட ஆறுஇலட்சம் யூதர்களை நினைவுகூறும்பொருட்டு அந்தவிளக்குகள் தொடர்ந்துஎரியப்பட்டு வருகின்றதுஎன்று கூறினார்கள்.
மேசியாவின் வருகைக்குஎதிர்பார்த்துகொண்டிருக்கும்யூதர்கள் 2000 வருடத்திற்குமுன் கிறிஸ்து வந்துஅவர்களுக்காகவும் தமதுகுற்றமற்ற இரத்தத்தைசிந்தி மரித்தார் என்பதைஇன்னும்அறியாதவர்களாகவேஇருக்கிறார்கள். 'அவர்தமக்குச் சொந்தமானதிலேவந்தார், அவருக்குச்சொந்தமானவர்களோ அவரைஏற்றுக்கொள்ளவில்லை' -(யோவான் 1:11). அந்திகிறிஸ்துவந்து, அவர்களுக்குதேவாலயம்கட்டப்படுவதற்கு உதவி,பின் அந்த தேவாலயத்தில்நானே மேசியா என்றுகூறும்போதுதான்யூதர்கள் அறிந்துகொள்வார்கள்இயேசுகிறிஸ்துவே மேசியாஎன்று. அவர்கள்இரட்சிக்கப்படுவதற்காகநாம் ஜெபிக்க வேண்டும்.ஏனெனில்அந்திகிறிஸ்துவின்காலத்தில் அதிகமாய்பாடுபட போகிறவர்கள்யூதர்களும்கிறிஸ்தவர்களுமே!'எருசலேமின்சமாதானத்துக்காகவேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள்சுகித்திருப்பார்களாக' -(சங்கீதம் 122:6). ஆமென்அல்லேலூயா!
எருசலேமே! எருசலேமே! என்பிரிய சாலேமே!
விரும்பிவந்தேன் பார்,
இதோ பார்,இதோ பார்
இந்தநாளாயினும் இந்தநாளாயினும்
இணங்க மனமோஎந்தனிடம் பெற
சமாதானம்சமாதானம்


ஜெபம்:
எங்களை அதிகமாய்நேசித்து வழிநடத்தும்நல்ல தகப்பனே, நீர்தெரிந்து வழிநடத்தியஜனமாகிய இஸ்ரவேலருக்காகஜெபிக்கிறோம். சாலேம்நகரம் என்றுஅழைக்கப்பட்டாலும்இன்னும் சமாதானம்இல்லாதபடி அநேகபோர்களினால் பாடுபட்டுகொண்டிருக்கும்உம்முடைய ஜனத்திறகாகஜெபிக்கிறோம்.தீவிரவாதங்களினால், அந்தமக்களின் உயிர்சூறையாடப்படுகிறதே,கண்ணோக்கி பாரும்தகப்பனே, அவர்களுக்குஇரங்கும். அந்த ஜனம்கிறிஸ்துவை கண்டு கொள்ளஅவர்கள் கண்களைதிறந்தருளும். அவர்களும்இரட்சிக்கப்பட கிருபைசெய்யும்.அந்திகிறிஸ்துவின்காலத்தில் அநேகபாடுகளுக்குள்ளாக செல்லஇருக்கும் அந்தமக்களுக்காகஜெபிக்கிறோம். தேவரீர்அவர்களுக்கு சமாதானத்தைதருவீராக. எருசலேம் நகரம்சமாதானத்தோடுசந்தோஷத்தோடு அமைதியாகவாழ கிருபை செய்வீராக.எங்கள் ஜெபத்தை கேட்டுஎங்களுக்கு பதில்கொடுப்பவரே உமக்கே நன்றி.இயேசு கிறிஸ்துவின்நாமத்தில் ஜெபிக்கிறோம்எங்கள் ஜீவனுள்ள நல்லபிதாவே ஆமென்.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum