இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

வாழ்வே ஒரு பாடல்!

Go down  Message [Page 1 of 1]

1வாழ்வே ஒரு பாடல்! Empty வாழ்வே ஒரு பாடல்! on Sat Nov 03, 2012 11:16 pm

brightbharathi


இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மரியாவின் புகழ் பெற்ற பாடலை இன்று சிந்திக்கிறோம்.
இந்தப் பாடல் மரியாவின் வாழ்வின் சுருக்கமாக அமைகிறது. அவரது வாழ்வின்
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களையும் இப்பாடல்
சுட்டுகிறது. ஒருவரது புகழ்ச்சி சொற்களால் அமைவதைவிட, செயல்களால் அமைவதையே
புகழ்ச்சியைப் பெறுபவர் விரும்புவார். இறைவனும் நமது நன்றியும்,
புகழ்ச்சியும் உதட்டால் அமைவதைவிட, நம் வாழ்வால் அமைவதையே விரும்புவார்.
மரியாவின் இறைபுகழ்ச்சி அவ்வாறே அமைந்திருந்தது. தாழ்நிலையில் இருந்த
தம்மை உயர்த்திப் பெருமைப்படுத்தியதை அவர் அறிக்கை இடுகிறார். இது
நிகழ்காலம். எல்லாத் தலைமுறைகளும் தம்மைப் பேறுபெற்றவர் என அறிக்கையிடுவர்
என்று போற்றுகிறார். இது எதிர்காலம். இறைவன் தனக்கு அரும்பெரும் செயல்கள்
பலவற்றைச் செய்துள்ளதாகப் பாடுகிறார். இது கடந்த காலம். இவ்வாறு,
முக்காலத்திலும் இறைவனின் இரக்கத்தை எண்ணிப் பாடுகிறார். அவரது முழு
வாழ்விலும் இறைவனின் பேரன்பைப் பறைசாற்றுகிறார்.


நமது வாழ்விலும் கடந்த காலங்களில் இறைவன் செய்த
வியத்தகு செயல்களையும், இந்த நாள்களில் நம்மீது பொழிந்துவரும்.
பேரிரக்கத்தையும், இனி வரவிருக்கின்ற காலத்திலும் இறைவன் நம்மைப்
பெரியனவற்றை நோக்கி வழிநடத்தப் போவதையும் எண்ணி இறைவனுக்கு உயிருள்ள
நாள்களெல்லாம் நன்றி கூறுவோமாக. நம் வாழ்வே நமது நன்றிப் பாடலாக
அமையட்டும்.


மன்றாடுவோம்: எம் இறைவா, எம் அரசே,
நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் நேற்றும்,
இன்றும், நாளையும் நீர் செய்த, செய்து வருகின்ற, இன்னும் செய்யவிருக்கின்ற
அரும்பெரும் செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி. என் வாழ்வை உமக்கு
அர்ப்பணிக்கிறேன். என் வாழ்வு உமக்கு உகந்த ஒரு பாடலாக அமைய அருள் தாரும்.
உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருள்தந்தை குமார்ராஜா

http://www.kavikuyil.yolasite.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum