இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

ஆண்டவர் வலியோரை

Go down  Message [Page 1 of 1]

1ஆண்டவர் வலியோரை Empty ஆண்டவர் வலியோரை on Sat Nov 03, 2012 11:20 pm

brightbharathi


''ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்:
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்:
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்'' (லூக்கா 1:52-53)


அன்பார்ந்த இணைதள நண்பர்களே!


-- மரியாவின் வாழ்க்கையில் கடவுள் புரிந்த அரும்
செயல்கள் மரியாவின் நன்றிக் கீதத்திற்கு அடிப்படை. இப்பாடல் பழைய
ஏற்பாட்டில் காணப்படுகின்ற அன்னாவின் பாடலைப் பெரிதும் ஒத்திருக்கின்றது.
பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாதிருந்த அன்னா கடவுளின் இரக்கத்தால்
சாமுவேலைப் பெற்றதால் கடவுளுக்கு நன்றி கூறிப் பாடினார் (காண்க: )
அதுபோல, மரியாவும் கடவுள் தமக்குப் புரிந்த அதிசய செயல்களை எண்ணி,
கடவுளைப் போற்றுகின்றார். இப்பாடலில் ஒரு தனித்தன்மை உண்டு. அதாவது உலகம்
பெரிதாக மதிப்பதைக் கடவுள் பெரிதாகக் கருதுவதில்லை. மாறாக, உலகம்
மதிப்பதற்றதாகக் கருதுவது கடவுளின் பார்வையில் மாண்புடைத்ததாகிறது. இது
''மனித மதிப்பீடுகளைப் புரட்டிப் போடுதல்'' என்னும் இலக்கிய மற்றும்
இறையியல் உத்தி.


-- மரியா பாலஸ்தீன நாட்டில் பிறந்த ஓர் ஏழைப்
பெண். அவருக்கு சமுதாயத்தில் பெண் என்ற முறையில் மதிப்பு இருக்கவில்லை.
அவர் பெரிய பதவியோ அதிகாரமோ கொண்டிருக்கவில்லை. ஆனால் கடவுள் அவரைத்
தேர்ந்தெடுத்து தம் மகனின் தாயாக மாறுகின்ற பெரும் பேற்றினை அளித்தார்.
பசியால் வாடிய இஸ்ரயேலருக்குக் கடவுள் வானிலிருந்து இறங்கிய உணவை
வழங்கினார்; அவர்களுடைய தாகத்தைப் போக்க அதிசயமான விதத்தில் நீரூயஅp;ற்று
தோன்றியெழச் செய்தார். அதே நேரத்தில் தங்களுக்கு எல்லாம் இருக்கிறது என
இறுமாப்புக் கொண்டு மமதையால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களைக் கடவுள்
முறியடித்தார். இதற்கும் விவிலியம் பல எடுத்துக்காட்டுகள் தருகிறது.
நன்மைக்கும் தீமைக்கும் இவ்வுலகிலேயே பலன் கிடைத்துவிடும் என நாம் கூற
முடியாது. என்றாலும், கடவுள் நேர்மையுள்ள நடுவர் என்பதால் அவர் மனிதரின்
உள்ளத்தைத்தான் பார்க்கிறார். வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறுபவர் அல்ல
அவர். எனவே, செல்வம் தங்களுக்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டு ஏழைகளை
மதியாதவர்கள் கடவுளிடமிருந்தும் மதிப்பு எதிர்பார்க்க முடியாது.
மரியாவின் பாடல் நமக்க உணர்த்தும் அரிய உண்மை என்னவென்றார்: நாம் மரியாவைப்
போலக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுதில் நிலைத்திருந்தால் கடவுள்
நமக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருவார். அது இவ்வுலகிலேயே தொடங்கி
மறுவுலகில் முழுமைபெறும்.


மன்றாட்டு
இறைவா, உம் திருப்புகழை எந்நாளும் பாடி மகிழ எங்களுக்கு அருள்தாரும்.


--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

http://www.kavikuyil.yolasite.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum