அழகியபூமி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

கேட்கிறவர்களாய் மட்டும் இருந்தால்....

Go down  Message [Page 1 of 1]

SherleenaPradeep



கேட்கிறவர்களாய் மட்டும் இருந்தால்....

என்னிடத்தில்
வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.

ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்.

லூக்கா 6 :47-49

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது (எபிரெயர் 4 :12 ). தேவனுடைய வார்த்தை குணமாக்கும். பாவத்தை மன்னிக்கும். நம்மை அழிவிலிருந்து மீட்டுக் கொள்ளும்.
பலர்
தேவனுடைய வார்த்தையை மிக ஆவலாய் கேட்பார்கள். கேட்பதோடு சரி. ஒரு காதில் கேட்டு மறு காதில் விடு என்று சொல்வார்களே அது போல!

ஒரு
சிலருக்கு கொஞ்ச நேரம் ஜெபிப்பதினாலும், வேதம் வாசிப்பதினாலும், சில ஆலய காரியங்களில் ஈடுப்படுவதினாலும், சில கிறிஸ்தவ புத்தகங்கள் வாசிப்பதினாலும், இயேசுவை பற்றி மணிக்கணக்காய் பேசுவதினாலும், தான் சிறந்த பக்தன் என்ற எண்ணம்!

ஆனால்
அவர்களுக்கெல்லாம் ஒரு கெட்ட செய்தி! அவர்கள் விழுந்து அழிந்து போக போகிறார்கள். ஏன்? எப்படி? ஆச்சரியமாய் இருக்கிறதா?

எனக்கு
தெரிந்த ஒருவர் இயேசுவால் தொடப்பட்டு, அபிஷேகம் பெற்று, வாழ்க்கையே மாறி இருந்தது. ஆனால் பரிதாபமாக ஆண்டவரின் வசனத்தின் படி நிற்க முடியவில்லை. நான் இயேசுவுக்காக வைராக்கியமாய் நிற்கிறேன் என்று சொல்லி, அவருடைய வசனத்துக்கு விரோதமான முடிவுகளை எடுத்து பலருக்கு சாட்சிக்கேடான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எவ்வளவோ பிரசங்கம் வைத்தும், அவர் வாழ்வில் அதை பிரதிபலிக்காததால் யாரும் இவர் வழியையோ இயேசுவின் வழியையோ பின்பற்ற முடியவில்லை. பலருக்கு இயேசுவை அறிவிக்கிற நல்ல வாய்ப்பை தவற விடுகிறார். அவர் ஆவலாய் வசனத்தை கேட்டும் பின்பற்றாமல் போவதால், வாழ்வில் நெருக்கங்களும், வேதனைகளும் வரும் போது இயேசுவின் மெய் வசனத்தின்படி விழுந்து அழிந்து போகாத படி ஜெபிக்கிறேன்.

ஏன் இந்த அவலம்?! ஏனெனில் அவருக்கு தெளிவான உறுதியான அஸ்திபாரம் இல்லை. வெளிப்படையான, வீடு போன்ற அமைப்புடைய ஒரு மணல் வீட்டை கட்டி அதில் குடியிருக்கிறார். மண் வீடு காற்றுக்கும் மழைக்கும் தாங்குமா?

எனக்கு இன்னொருவரை தெரியும். அவர் இயேசுவை இந்து மார்க்கத்திலிருந்து ஏற்று வைராக்கியமாய் வாழ்பவர். நான் பல நாள் அவரை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆண்டவரிடம் அன்பு வைப்பதிலும் சரி, அவர் கட்டளைகளை கடைப்பிடிப்பதிலும் சரி, மிக நேர்த்தியாய் செய்வார். ஆண்டவருடைய வார்த்தையை அதிக கவனத்துடன் கேட்டு, அதை பிறருக்கு சொல்லி, அவர்களுக்காய் பாரப்பட்டு ஜெபித்து, அதனை கடைப்பிடிப்பார்.
அவர்
வாழ்வில் வந்த பல இக்கட்டுகளில் இருந்து அவரை ஆண்டவர் விடுவித்தார். அவர் இயேசுவை தன் அஸ்திபாரமாய் கொண்டிருக்கிறார்.

காதிருந்தும் செவிடர்களாய் கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்கிறீர்கள் என்று இயேசு நம்மை சுட்டிக்காட்டாத படி, நாம் கேட்கிற வசனத்தை கடைபிடிக்கிறவர்களாயும், காண்கிற அவரது அற்புதங்களை ஆழமாய் விசுவாசித்து பறைசாற்றுகிறவர்களாயும் இயேசுவை பாறையாகிய அஸ்திபாரமாய் கொண்டு அவர் மேல் நம் வீட்டை கட்டுவோம். என்றும் அசைவுறாமல் நிற்போம்!

வாசிப்பவர் இயேசுவை அறிய,
திருமதி
. ஷர்லினா பிரதீப்

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum