இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன்!

Go down  Message [Page 1 of 1]

இரட்சிப்பு!
இந்த
வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தன்னை கிறிஸ்தவன் என்று பறைசாற்றுகிற யாவரும் அறிந்திருக்க வேண்டும், பெற்றிருக்
வேண்டும்
.
இல்லையெனில்
....சொல்ல கொஞ்சம் கஷ்டம் தான்....மன்னிக்கவும்...நீங்கள் கிறிஸ்தவரே அல்ல.
கசப்பான
உண்மை தான்.....ஆனால் எவ்வளவு நாள் பொய் ஆளுகை செய்யும்?
"
மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்கு சொல்லுகிறேன்". யோவான் 3:3
மறுபடியும்
பிறக்கும் இந்த அனுபவம் தான் இரட்சிப்பு.
பாவத்திலிருந்து
இரட்சிப்பு! சாபத்திலிருந்து இரட்சிப்பு!நோயிலிருந்து இரட்சிப்பு! இன்னும் உங்கள் எல்லா எதிர்மறைகளிலிருந்தும் இரட்சிப்பு!
உங்களின்
நிலையற்ற நிலையில் இருந்து நிலை வாழ்வுக்கான நிச்சயத்தை பெற்றுக்கொள்கிறீர்கள்.
எப்படி
ஒரு குழந்தை தாய் கருவில் உருவாகுவது விந்தையான ஆச்சரியமோ அதே போல் ஒரு மனிதனின் மறுபடியும் பிறத்தல் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
சொல்லப்போனால்
எதிர்க்க தெரியாத பச்சிளம் குழந்தையை விட.....எதற்கும் எதிர்த்தே பழகிவிட்ட ஒரு அறிவுள்ள மனிதனின் சுபாவங்களையும் அவன் வாழ்வையும் மாற்றுவது அத்தனை சுலபமல்ல. ஒரு பெரிய விலை அதற்கு உண்டு. அதை நாம் செலுத்த நம் வாழ் நாள் போதாது.
அதனால்
தான் நம்மை உண்டாக்கி அன்பு செய்கிற இறைவன் "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்புகூர்த்தார்." யோவான் 3:16
இயேசுவின்
இரத்தத்தில் நமக்கு நிச்சயம் புது வாழ்வு உண்டு.
நம்
வீட்டில் வளர்க்கும் நாய்க்கு 'ஜிம்மி' என்று பெயர் வைப்பதால் அது கிறிஸ்தவனாக முடியுமா?
நாம்
ஒரு கிறிஸ்தவ வீட்டில் பிறப்பதாலோ, ஞானஸ்நானம் எடுப்பதலோ, தவறாமல் ஆலயத்திற்கு செல்வதாலோ கிறிஸ்தவனாக முடியாது.
கிறிஸ்தவனாக
ஒரே தகுதி 'கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறத்தல்'. அதாவது இயேசுவை தன உள்ளத்தில் ஏற்று, அவர் நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசித்து, அவர் இரத்தத்தின் மூலம் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொண்டு, அவர் கட்டளைகளை இறுதி வரை கடைப்பிடித்து 'நல்ல ஊழியன்' என்று பெயர் பெறுவதே மறுபடியும் பிறத்தலின் அனுபவம்.
நான்
மறுபடியும் பிறந்திருக்கிறேன்!

என்
வாழ்வில் சிறு வயதில் இயேசுவை பெயரளவில் அறிந்திருந்தாலும், உண்மையில் அவரின் அன்பை நான் சுவைக்கவில்லை. நான் ஒரு பெயரளவு கிறிஸ்தவளாக வாழ்ந்து வந்தேன்.
பாவத்தைக்
குறித்த பயம் என்னிடத்தில் சுத்தமாக இல்லை. பாவம் செய்யும் போது மனிதன் பார்த்தால் அவமானம் என்று நினைத்த நான் தேவன் பார்க்கிறார் என்ற எண்ணமே இல்லை.
யாரவது
இயேசுவை பற்றி போதகம் பண்ணினால் அவ்வளவு தான். ஏதோ எனக்கு தான் எல்லாம் தெரியும் போல படு பயங்கரமாக அவர்களுடன் தர்க்கம் செய்வேன். அது என்னுடைய புத்தியீனம் என்று இப்பொழுது உணர்கிறேன்.
'
அல்லேலூயா' என்ற வார்த்தையை கேட்டாலே அவ்வளவு தான், பேய் ஆட்டம் போடுவேன்.
எங்கள்
குடும்பத்தில் நடந்த ஒரு சோகமான நிகழ்வினால் ஒரு ஜெப கூட்டத்திற்கு நான் கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டேன். இஷ்டம் இல்லாமல் சென்ற நான் போகிற வழியில் இரயிலில் மிகவும் கும்மாளம் அடித்தோம். எங்கள் குடும்பத்தில் இருந்து மொத்தம் 27 பேர் சென்றோம். என்னோடு பயணம் செய்த என் தம்பி பல வருடம் கழித்து என்னை பார்த்ததால் சிறுவயதில் என்னை எப்படி அழைப்பான் என்று மறந்து, என் பெயர் சொல்லி கூப்பிட்டான். நான் என்னை 'அக்கா' என்று அழைக்குமாறு சண்டைப் போட்டேன். நான் அவன் மேல் மிக கோபமாயும் இருந்தேன்.
ஜெப
அரங்கிற்குள் சென்றவுடன் என்னுள் ஒரு விதமான வித்தியாசமான சமாதானத்தை உணர்ந்தேன். அதை விளக்குவது கடினம். அது ஓர் ஆறு நாள் தியானம். முழுவதுமாய் இறைவார்த்தை நிறைந்திருந்தது. பாவத்தை பற்றியும், மன்னிப்பை பற்றியும், இயேசுவின் வல்லமைகளை பற்றியும் விளக்கினார்கள். எனக்குள் ஏதோ புது வித மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது என்ன என்று அப்போது எனக்கு புரியவில்லை. ஒரு நாள் கலந்தாய்வின்(counselling) போது , கவுன்சிலர்(counsellor ) என்னை ஓர் இருளான முத்தோடு பார்த்தார்கள். நான் என்னை எவ்வளவு தான் நல்லவள் என்று காண்பித்தாலும் அவர் என்னை மிக தீர்க்கமாய் பார்த்து எனக்காய் ஜெபித்தார்கள். ஜெபித்து விட்டு, 'உன் பாவங்கள் வேர் விட்டு கனி கொடுக்கும் நிலையில் இருக்கிறது' என்றார்கள். எனக்கு தூக்கிவாரி போட்டது. ஆறு நாள் ஜெபம் முடிந்து நாங்கள் இரயிலுக்காக காத்திருக்கும் போது, என் தம்பி அதே விதமாக என் பெயர் சொல்லி கூப்பிட்டான். இந்த முறை நான் மிக சாந்தமாக திரும்பி 'என்னம்மா' என்றேன். அப்பொழுது தான் நான் உணர்ந்தேன் எனக்குள் மாற்றம் நிகழ்ந்திருப்பதை. இயேசு என்னை தொட்டிருந்தார் (அதிலிருந்து என் தம்பி என்னை மிக மரியாதையுடன் 'அக்கா' என்றே அழைக்கிறான். இயேசு தந்த ஒளி).
வீட்டிற்கு
திரும்பிய நான் எப்பொழுதும் இயேசுவை பற்றிய நினைவாய் இருந்தேன். அவரை துதித்து, பாடல்கள் பாடி, வேதம் வாசித்து, ஜெபத்தில் பல மணி நேரங்கள் செலவிட்டேன். நான் தூங்கும் போதும் நினைவில் இயேசு தான். என் பாவ வாழ்வு அறவே அற்று போய்விட்டது. ஒரு புது படைப்பாக மாறிவிட்டேன். என் பேச்சில் கனிவும், என் உள்ளத்தில் இயேசுவின் சமாதானமும், மகிழ்ச்சியும் நிரம்பியிருந்தது. என் வாழ்வின் சோகமும் இயேசுவின் பாசத்தால் கரைந்து போய்விட்டது. ஆனால் இந்த நிகழ்வுக்கு பெயர் என்ன என்று எனக்கு புரியவில்லை. அப்பொழுது என் தம்பி என் வீட்டிற்கு வந்திருந்தான். என்னை பார்த்து கேட்டான் 'அக்கா நாம 27 பேர் ஜெபத்திற்கு போனோம். யாருக்கும் ஒன்றும் ஆகல. உனக்கு மட்டும் என்ன பைத்தியம் பிடிச்சிட்டா? எப்பவும் இயேசு இயேசு-ன்னு சொல்லுற?'. அப்பொழுது தான் எனக்கு புரிந்தது 'ஆஹா! இது எனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட பாக்கியம் என்று!'.
அதன்
பிறகு நிறைய ஜெப கூட்டங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு தான் நான் அறிந்து கொண்டேன், எனக்குள் நிகழ்ந்திருப்பது 'இரட்சிப்பின் அனுபவம்' என்று. ஆம் நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன். என் பழைய மனுஷி ஒழிந்து புதிய வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.
மறுபடியும்
முதலில் நான் போன ஜெப மையத்திற்கு போகும் போது, ஆண்டவருடைய கிருபையில் அதே கவுன்சிலரிடம்(counsellor) போக வாய்ப்பு கிடைத்தது. என்னை அவர்களுக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இந்த முறை என்னை பார்த்தவுடன் அவர்கள் முகத்தில் பிரகாசம். நான் அவர்களிடம் சொன்னேன். என் வாழ்வில் கவலைகளே இல்லை. சும்மா உங்களிடம் பேசலாம் என்று வந்தேன். அவர் உற்சாகமாக என்னோடு தன் வாழ்வில் அவர் மக்களுக்கு இயேசுவை சொன்ன நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். உன்னை பார்த்தவுடன் இதை எல்லாம் சொல்ல வேண்டும் போல இருந்தது என்று அவர்கள் சொன்ன போது, இயேசு என் வாழ்வை எப்படி காரிருளில் இருந்து ஒளிக்கு கொண்டுவந்திருக்கிறார் என்று நினைத்து நினைத்து அவருக்கு கண்ணீரோடு இன்றும் நன்றி சொல்லுகிறேன்.
"
ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!". 2கொரிந்தியர் 5 :17
இயேசுவோடு
என் பயணம் 8 வருடங்களாய் அவருடைய இரத்ததினால் வெற்றியோடு தொடர்கிறது. என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர். இறுதிவரை நடத்துவார்.
என்
பாவங்களை தன் முதுகுக்கு பின்னால் தூக்கி போட்டு அதை மன்னித்து மறந்த தேவன், நித்திய வாழ்வையும் எனக்கு பரிசுத்த ஆவியானவருடைய அடையாளத்தோடு வாக்கு பண்ணிருக்கிறார் .
இந்த
அன்பு ஆண்டவரை பின்பற்ற நீங்களும் உங்களை ஒப்புக்கொடுங்கள். நிச்சயமாய் உங்களை அவர் ஏற்றுக்கொள்ளுவார்.
காலத்தாமதம்
பண்ணும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு தான் நஷ்டம். பரிசுத்தர், பாசத்தோடு அழைக்கிறார். அவரிடம் போங்கள். ஜீவத்தண்ணீரை உங்களுக்கு தந்து பரிசுத்த நிலையான வாழ்வை உங்களுக்கு அளிப்பார்.
இயேசு
அழைக்கிறார்!
வாசிப்பவர்கள்
இயேசுவை அறிய,
Mrs. Sherleena Pradeep

View user profile
"மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்கு சொல்லுகிறேன்". யோவான் 3:3
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்புகூர்த்தார்." யோவான் 3:16
"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!". 2கொரிந்தியர் 5 :17
இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மேற்கோடிட்டு எழுதிய தங்களது படைப்பு அருமை. தொடரட்டும் தங்கள் பணி, அன்புடன் ப,பிரைட்பாரதி/அழகியபூமியிலிருந்து,
www.kavikuyil.yolasite.com

View user profile http://www.kavikuyil.yolasite.com
உங்கள் கருத்துக்கு நன்றி

View user profile

Sponsored content


Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum