அழகியபூமி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

புனித தோமையர்

Go down  Message [Page 1 of 1]

1புனித தோமையர்  Empty புனித தோமையர் Mon Mar 14, 2011 8:39 pm

brightbharathi



இயேசுவின் சீடர்கள் மொத்தம் எத்தனை பேர்? என நாம் பள்ளி
பாடப்புத்தகத்திலேயே படித்திருப்போம். அந்த பனிரெண்டு சீடர்களில் நம்
இந்திய தேசத்திற்கு வந்தவர்தான் (செயின் தாமஸ்) புனித தோமையர் ஆவார்.

அந்த
காலத்தில் கேரளாவில் குன்டாகுரஸ் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்துவந்தான்.
அந்த மன்னன் ஒருமுறை எனக்கு அழகான மரத்திலேயே ஒரு அரண்மனை கட்டவேண்டும்.
அதனால் ஒரு சிறந்த தச்சர் வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுள்ளான்.

அதற்கு
அந்த அமைச்சர் எனக்கு ஒரு மிகச் சிறந்த தச்சரை தெரியும் என்றும், அவர்
ஜெருசலேம் நாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தான். “அவன் எங்கிருந்தாலும் உடனே
வரச் சொல்” என மன்னன் கட்டளையிட்டான்.

இந்த
செய்தியை அறிந்து வாஸ்கோடகாமா வழியாக கேரளா சென்றார் தோமையர். அங்கே மன்னனை
சந்தித்தார் தோமையர். அரண்மனை கட்ட எவ்வளவு காலம் ஆகும், எவ்வளவு
செலவாகும் என பேசி, அதற்கான தொகையும் தேவையான மரமும் வழங்கப்பட்டது.

தோமையர்
அந்த பணம் முழுவதையும் கிறிஸ்துவ தேவாலங்கள் கட்டவும், ஏழை எளிய
மக்களுக்கும் வாரி வாரி வழங்கிவிட்டார். காலம் சென்றது. மீண்டும் தோமையரை
அழைத்தான் மன்னன்.

“அரண்மனை கட்டி
முடித்தாயிற்றா? எங்கே பார்வையிடலாமா” என்று கேட்டான் மன்னன். “ஆம்!
கட்டியாயிற்று மன்னா” என்று பதிலளித்தார் தோமையர். “எங்கே! எங்கே!!”
என்றான் மன்னன். கையை மேலே காட்டி “மேல் லோகத்தில்” என்றார் தோமையர்.

மன்னனுக்கு
வந்ததே கோபம்... “அவனை சிறையிலடையுங்கள்” என கட்டளையிட்டான். தோமையர்
சிறைசென்றும் சும்மாயிராமல் உள்ளேயிருந்த கைதிகளுக்கு இயேசுவை பற்றி போதனை
செய்துள்ளார். அதன்பின் மன்னனுடைய தம்பி கார்ட்ஸ் மரணமடைந்துவிட்டான்.

அவன்
ஒருநாள் மன்னனின் கனவில் வந்து, “அண்ணா உண்மையிலேயே அவர் உனக்காக ஒரு
அரண்மனை கட்டியிருக்கிறார், அந்த பளிங்கு மாளிகையை வார்த்தைகளால்
வர்ணிக்கமுடியாத அளவிற்கு உள்ளது” என்று கூறினானாம்.

அதனால்
மனம் மாறிய மன்னன், தோமையரை விடுதலை செய்யும்படி கட்டளையிட்டான்.
அங்கிருந்து வெளியேறிய தோமையர். அப்படியே கன்னியாகுமரி முதல் சென்னை வரை
வரும்வழியில் நடந்தே வந்திருக்கிறார்.

சென்னை,
சின்னமலை என்ற இடத்தில் அவர் மதத்தை பற்றிய போதனை செய்து வந்துள்ளார்.
பார்ப்பனர்கள அதிகம் வசிக்கும் அங்கே, அவரை எங்கு கண்டாலும் கொலை
செய்யும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அவர்
உயிருக்கு அஞ்சி, சின்னமலையிலுள்ள ஒரு குகையில் ஒளிந்து கொண்டு பிரார்த்தனை
செய்து கொண்டிருந்தார். அதனை பார்த்த ஒரு ஆசாமி, அந்த நபரை ஓங்கி
ஈட்டியால் அவருடைய முதுகில் குத்தியிருக்கிறான்.

குத்துப்பட்ட
அவர் அங்கிருந்து கத்திக்கொண்டே சுமார் 8 கிலோமீட்டர் தூரம் ஒடி,
பரங்கிமலை என்றழைக்கப்படும் மலை மீதுஏறி உயிரை விட்டிருக்கிறார்.
அதற்குப்பின்புதான் அந்த மலை செயின் தாமஸ் மவுண்ட் என்றழைக்கப்பட்டது.

http://www.kavikuyil.yolasite.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum