அழகியபூமி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

விவிலிய நூல்கள் உருவான வரலாறு :

Go down  Message [Page 1 of 1]

brightbharathi



sunny விவிலிய நூல்கள் உருவான வரலாறு : sunny


இருபத்தோராம் நூற்றாண்டில்
வாழ்கின்ற நாம் விவிலியத்தைப் புரட்டும்போது அங்கே பழைய ஏற்பாடும் புதிய
ஏற்பாடுமாக பல புத்தகங்கள் வரிசையாகத் தரப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
இந்த நூல்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆசிரியரால் எழுதப்பட்டதுபோலத் தோன்றலாம்.
ஆனால், விவிலிய நூல்கள் அவ்வாறு தோன்றவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில்
ஆசிரியர் ஒருவர் ஏட்டையும் எழுதுகோலையும் கையில் எடுத்து, தம் நூலை
எழுதிவிடவில்லை. மாறாக, விவிலியத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு நூலுக்கும்
ஒரு வரலாறு உள்ளது. அந்த நூல்கள் ஒவ்வொன்றும் பல படிகளைத் தாண்டி வந்த
பின்னரே இன்று நாம் பார்க்கின்ற வடிவத்தைப் பெற்றன.


இந்த வரலாற்றுப் படி வளர்ச்சியை நாம் மூன்று கட்டங்களில் நிகழ்ந்ததாகக் கூறலாம். அவையாவன:


  • வாய்மொழி மரபுக் கட்டம்; கடவுளைத் தங்கள் வாழ்வில்
    சந்தித்த அனுபவத்தை மக்கள் வாய்மொழியாகப் பகிர்ந்துகொண்டனர். தங்கள்
    பிள்ளைகளுக்கும், பின்வந்த தலைமுறைகளுக்கும் அந்த அனுபவக் கதைகளை
    எடுத்துக் கூறினர். இவ்வாறு பல தலைமுறைகளாக இந்தக் கூற்றுரைகள் வாய்மொழி
    வழியாகவே அளிக்கப்பட்டுவந்தன.

  • நாள் செல்லச் செல்ல, எழுத்துப் பணியில் திறமை
    பெற்றிருந்த எழுத்தர்கள் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த
    அக்கதைக் கூற்றுக்களை ஏடுகளில் கைப்படியாக எழுதிவைத்தனர். இவை, குறிப்பாக,
    மக்களின் இறைநம்பிக்கை ஆபத்துக்கு உள்ளான காலங்களில், அவர்களை
    ஊக்குவிக்கும் வண்ணமும், அவர்களுடைய பாரம்பரியங்களைப் பழுதறப்
    பாதுகாக்கும் வண்ணமும் எழுதிவைக்கப்பட்டன.

  • மேலும் நாள் செல்லவே, திறமை பெற்ற எழுத்தர்கள்
    ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த எழுத்துவடிவான மரபுகளைக் கோவையாக இணைத்து,
    தொகுதிகளாகப் பிணைத்து, பதிவு செய்தனர். அவ்வாறு செய்தபோது, அவர்கள்
    வாழ்ந்த சமகாலச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டனர்.

இவ்வாறு மூன்று முக்கிய கட்டங்களைத் தாண்டி
வந்தவையே விவிலிய நூல்கள் ஆகும். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூல்களுள் எவை எவை
சமயம் சார்ந்த திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதைச் சமயக்
குழுக்கள் (யூதக் குழு; கிறிஸ்தவ திருச்சபை) அதிகாரப்பூர்வமாக ஒரு
குறிப்பிட்ட காலத்தில் நிர்ணயம் செய்தன. இதையே விவிலியத் திருமுறை (டிiடிடiஉயட உயழெn)
என்று அழைப்பர். இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டதற்கு அடிப்படையான அளவுகோல்
அந்த விவிலிய நூல் கிறிஸ்தவ, யூத சமய நம்பிக்கையை முழுமையாகப்
பிரதிபலித்ததா என்பதே. இவ்வாறு, சமய நம்பிக்கைக்கு ஒவ்வாதனவாகக்
கருதப்பட்ட பல நூல்கள் விவிலியத் திருமுறையில் இடம் பெறவில்லை, அல்லது சில
சமயம் இடம் பெற்றிருந்தாலும் பின்னர் திருமுறையிலிருந்து நீக்கப்பட்டன.



ஒரு குடும்பத்தில் நடக்கும்
நிகழ்வுகளை அக்குடும்ப உறுப்பினர் ஒருவர் ஒருவரோடு, உறவினரோடு
பகிர்ந்துகொள்வது இயல்பு. இவ்வாறு எழுகின்ற தொடர்உரைகள் பெற்றோரிடமிருந்து
பிள்ளைகளுக்கும், பிள்ளைகளிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கும் கதைபோல
சொல்லப்படுவது வழக்கம். இவ்விதத்தில் ஒரு குடும்பத்தின் வரலாறு
அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் உள்ளத்தில் ஆழப்பதிவதோடு, அவர்களுடைய வரலாறு
பற்றி அவர்கள் பெருமிதம் கொள்வதற்கும் துணையாகிறது. இது ஒரு
குடும்பத்துக்கு எப்படிப் பொருந்துமோ, அதுபோலவே விவிலியக் காலத்துக்கு
மக்களுக்கும் பொருந்தும். அவர்களும் சமய நம்பிக்கையின் அடிப்படையில்
குழுவாகக் கூடினர். எனவே, அவர்களது நம்பிக்கையிலிருந்து எழுந்த கதைகளைத்
தலைமுறை தலைமுறையாக வழங்கினர். முதலில் எழுந்தது "வாய்மொழி" வரலாற்று மரபு
என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

http://www.kavikuyil.yolasite.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum