இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

அழகை ஆராதிக்காதீங்க!

Go down  Message [Page 1 of 1]

அழகு!

எங்கே திரும்பினாலும் தேவன் படைத்த அழகின் ஆளுகை. மனிதன் கண்டு பரவசப்பட ஆண்டவரின் நேர்த்தியான திட்டம் தான் அவரின் அழகிய படைப்புகள். ஆனால் எந்த நல்லதிலுமிருந்து கெட்டதை உருவாக்கிவிடும் பிசாசு மனிதனின் உள்ளத்தில் போடும் தீய எண்ணத்தினால் இயற்கை அழகை வியாபாரமாக்கி,அதினால் நிறைவேற வேண்டிய திட்டத்தை நிர்மூலமாக்குகின்றான்.

மனிதனின் அழகு என்பது அவன் தோற்றத்தில் இல்லை அவன் உள்ளத்தின் தூய்மையில் இருக்கிறது.

தோற்ற அழகின் மயக்கதினாலும் பெருமையினாலும் வீழ்ந்த பலரின் கதைகள் நமக்கு தெரியும்.

வேதாகமத்தில் இருந்து ஒரு கதை பார்ப்போம்.

அப்சலோம் தாவீதின் மகன். அவன் மிக சௌந்தரியவானாகவும், அழகிய தலைமுடி உடையவனாகவும் இருந்தான்.

இஸ்ரவேலர்
அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை, உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.

அவன் தன் தலைமயிர் தனக்குப்பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.
II
சாமுவேல் 14 :25 ,26

தன் தந்தை தாவீதின் ஆட்சியை அடைய விரும்பியதால் அப்சலோம் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். எது அவனுக்கு பெருமை தேடி கொடுத்ததோ அதுவே அவன் மரணத்திற்கும் காரணமாகிவிட்டது. தாவீதின் வீரர்கள் அப்சலோமை விரட்டி வரும் போது அவன் தலைமுடி ஒரு கருவாலி மரத்தில் சிக்கி அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான். தாவீதின் வீரர்கள் அவனை அடித்து கொன்றார்கள். பரிதாபம்! எதன் மேல் அப்சலோமின் பெருமை இருந்ததோ அதுவே அவன் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகிவிட்டது.

அப்சலோம்
தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று..........அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்
II
சாமுவேல் :9 ,15

பெண்களின் அழகு அவர்களின் அடக்கத்தில் இருக்கிறது. இன்று விளம்பரம் மற்றும் சினிமாவில் வரும் அழகு சாதனங்களையும் அசிங்க உடைகளையும் பெண்கள் போட்டு கொண்டு பெண் உரிமையை பற்றி பேசுகிறார்கள். பெண்ணுரிமை எதில் உள்ளது? உங்களின் அழகை வெளிக்காட்டி பிறரை மயக்குவதிலா?

சௌந்தரியம்
வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதிமொழிகள்
31 :30


ஒரு பெண் அழகாய் இருந்தாலும் தன்னை ஞானமாய் காக்காமல் மதிகேடாய் நடந்தால் அவள் பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமமானவள். என்னதான் பொன் மூக்குத்தியை குத்திவிட்டாலும், பன்றியின் மதிப்பு கூடாது.

ஒரு பெண் எவ்வளவு தான் அழகாய் இருந்தாலும், அவள் நடவடிக்கை சரியில்லாவிட்டால் எந்த புத்தியுள்ள ஆணும் அவளை அண்ட மாட்டன் அவளை திருமணம் செய்ய நினைத்து கூட பார்க்கமாட்டான். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

மதிகேடாய்
நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
நீதிமொழிகள்
11: 22

வேதாகமதிலிருந்து ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவமானத்தை பார்ப்போம்.

லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.
ஆதியாகமம்
34 :1 ,2


சாலேம் பட்டணத்திற்கு குடிவந்த தீனாள் யாக்கோபின் மகள். அழகுள்ளவள். அவள் தனியாக அந்த தேசத்து பெண்களை பார்க்க புறப்பட்டாள்.
அவளின் அழகை கண்டு மயங்கிய அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் அவளை கெடுத்துப்போட்டான்.
இதன் விளைவு தீனாளுடைய சகோதரர்கள் சூழ்ச்சி செய்து அந்த பட்டணத்திலுள்ள எல்லா ஆண்மக்களையும், அவளை கெடுத்த சீகேமையும் கொன்றழித்தார்கள். பரிதாபம்! ஒரு பெண்ணின் புத்தியீனம் அவளின் கணவனின் மற்றும் பலரின் உயிரை பலியிட்டது. அவள் சகோதரர்களை கொலைக்காரர்களாகவும் மாற்றியது. தீனாள் நல்லொழுக்கம் இல்லாததனால் மானத்தை கெடுத்தாள்.

நல்லொழுக்கமுள்ள
ஸ்திரீ மானத்தைக் காப்பாள்;
நீதிமொழிகள்
11: 16


ஒரு அழகான பொருளையோ பெண்ணையோ ஆணையோ பார்த்தால், அவர்கள் மேல் காதலோ, பிடித்தமோ வருவதை ஒழித்து, அவர்களை அவர்களின் அழகுக்காக புகழ்வதை நிறுத்தி, அவர்களை அழகாய் படைத்த இயேசுவுக்கு நன்றி சொல்லுவோம். அது நம்மை அழிவுக்கு விலக்கி காக்கும்.

ஒரு கலை மானுக்கு அழகிய நீண்ட கிளைகளுள்ள கொம்புகள் இருந்தன. அந்த மானுக்கு அதன் கொம்புகளின் மேல் உள்ள கர்வத்திற்கு அளவே இல்லை. தினமும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் குடிக்க போகும் போது தெளிந்த நீரில் தன் அழகிய கொம்புகளை பார்த்து பார்த்து பெருமைப்பட்டுக்கொள்ளும். 'உலகத்திலயே எனக்கு தான் அழகிய கொம்பு'! அதே நேரத்தில் அதற்கு தன் மெலிந்த கருத்த கால்களை பார்த்து ஒரே வெறுப்பு. 'ஏன் இந்த கால்கள் இவ்வளவு அசிங்கமாய் இருக்கு? என் அழகிய கொம்புகளுக்கு இது பெரிய அவமானமாய் இருக்குதே' என்று பொருமி தள்ளும்.

ஒரு நாள் ஒரு புலி இந்த மானை இரைக்காய் விரட்ட ஆரம்பித்தது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மான் ஒரு மரக்கிளையில் தன் கொம்புகள் மாட்ட தப்பிக்க வழியில்லாமல் முழித்தது. சில நிமிடங்கள் போராடி தலையை அங்கும் இங்கும் அசைத்து தப்பிக்க வழித்தேடியது. அதன் இந்த விடா முயற்சியில் கொம்பு உடைந்து போனது. கொம்பா இப்போ முக்கியம்?! உயிர் இருந்தா தானே கொம்புக்கு மதிப்பு! ஒரு வழியாய் தப்பிய மான் தன் கால்களால் வேகமாய் ஓடி புலியிடமிருந்து தப்பியது.

காலா? கொம்பா? எது மானை காப்பாற்றியது? இதை தான் இன்று பலர் புரியாமல் தங்கள் வாழ்க்கையை தவறான வழியில் நடத்துகிறார்கள்.

ஆண்கள் தங்களுக்கு திருமணம் பார்க்கும் பொது பெண் அழகாய் சிகப்பாய் இருக்க வேண்டும் என்று பல கெடுபிடிகள் போடுகிறார்கள். குணத்திற்கு இரண்டாம் இடம் தான். அழகா வாழ வைக்க போகிறது? திருமணம் ஆன பின் அதை பற்றி தெரியும். அப்பொழுது கண்ணீர் வடித்து பிரயோஜனம் இல்லை. அதற்காக அழகிய பெண்ணை திருமணம் செய்ய கூடதாது என்றல்ல. அழகோடு பண்பும், கர்த்தருக்கு பயப்படும் பயமும், ஆவியின் கனியும் இருக்குமானால் அது அழகுக்கு அழகு சேர்க்கும்(Icing on cake )

ஜாக்கிரதை! அழகு மாயை. அது சில காலம் தான். அதன் பின்னால் போகிறவர்கள் காற்றை பிடிக்க நினைப்பவர்கள் போல.

ஒரு பெண் மிக அழகாய் இருந்தாள். அதனாலயே அவளுக்கு பல பிரச்சனைகள். பலருக்கு அவளை கண்டால் ஓர் ஆவல். அவளுக்கு நாம் ஏன் அழகாய் இருக்கிறோம் என்ற வெறுப்பே வந்து விட்டது. பின் ஒரு ஊழியக்காரர் மூலமாய் இரகசியத்தை அறிந்து கொண்டாள். தினமும் தன்னை இயேசுவின் இரத்ததினால் மறைந்து காத்தருளுமாறு ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்பொழுது யாரும் அவளை அண்டுவதில்லை. ஏன் திரும்பி கூட பார்ப்பதில்லை. இயேசுவின் இரத்தத்தின் வல்லமை பெரியது.

தினமும் கலையில் 'ஆண்டவரே என்னால் என் அழகால் யாரையும் நான் கவரக்கூடாது, யாராலும் யாருடைய அழகாலும் நானும் கவரப்படக்கூடாது. என்னை இயேசுவின் இரத்தம் காக்கட்டும்' என்று ஜெபியுங்கள். இந்த ஜெபம் எல்லா வயதினர்களுக்கும் பொருந்தும்.

ஆண்களே!உங்கள் அழகு உங்களை படைத்த இறைவனுக்கும், உங்கள் மனைவிக்கும் சொந்தமானது. அதை பிறருக்கு பகிர்ந்தளிக்காதீர்கள்.

பெண்களே!உங்கள் அழகு உங்களை படைத்த இறைவனுக்கும், உங்கள் கணவருக்கும் சொந்தமானது. அதை பிறருக்கு பகிர்ந்தளிக்காதீர்கள்.

அழகை ஆராதிக்காதீர்கள். அழகை படைத்தவரை ஆராதியுங்கள்!

வாசிப்பவர் இயேசுவை அறிய,
திருமதி. ஷர்லீனா பிரதீப்

View user profile

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum