இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

எத்தனை இன்பம்!

Go down  Message [Page 1 of 1]

1எத்தனை இன்பம்! Empty எத்தனை இன்பம்! on Wed Apr 06, 2011 1:36 am

எத்தனை இன்பம்!
"
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?...அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்".

சங்கீதம் 133 : 1 ,3
 

வேதாகமத்தில் உள்ள ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்.
யோசேப்பு யாக்கோபுக்கு பதின்மூன்று பேரில் பதினொன்றாம் பிள்ளை. தன் அன்பு மனைவி ராக்கேல்-ன் மகன் ஆதலால் அவர் மேல் கொஞ்சம் கூடுதல் பாசம் வைத்திருந்தார் அவர் அப்பா யாக்கோபு. அதுவே பிரச்சனைகளுக்கு காரணமாய் ஆகிவிட்டது. யோசேப்புக்கு கிடைத்த பல வர்ண அங்கி, மற்றும் யோசேப்பு தன் சகோதரர்களை விட மேன்மையான நிலையில் இருப்பது போன்ற கனவுகள் அவர் சகோதரர்களை எதிரிகள் ஆக்கிவிட்டது. அவருடைய பத்து சகோதரர்கள் அவரை எகிப்தியர்களுக்கு அடிமையாய் விற்று விட்டார்கள். அங்கே போத்திபாரின் மனைவிக்கு இணங்காததால் சிறையில் அடைக்கப்பட்டார். ஆண்டவர் அவருக்கு கொடுத்த வரத்தினால் பார்வோன் மன்னனின் கனவை விளக்கி எகிப்தின் ஆளுநர் ஆனார். பஞ்சத்தினால் அவர் சகோதரர்கள் எகிப்துக்கு உணவு தேடி வரும் போது, பல வருடங்கள் கழித்தும் தன் சகோதர்களை அடையாளம் கண்ட யோசேப்பு, அவர்களை மன்னித்தும், ஏற்றும் கொண்டார். பஞ்சக்காலம் முழுவதும் அவர்களுக்கு உணவளித்து உறைவிடம் கொடுத்து பாதுகாத்தார். அவர் சொன்ன வார்த்தை தான் இதில் எல்லாவற்றிலும் மேன்மையானது. "நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள். அனால் ஆண்டவரோ தீமையை நன்மையை மாற்றினார்". ஒரு சகோதரனுக்கு இவ்வளவு பெருந்தன்மையும் மன்னிக்கும் மனப்பான்மையும் இருப்பது ஆச்சரியம்!
இன்றைய நாட்களில் சகோதர்கள் கூடிவாழ்வது எட்டாக்கனி ஆகிவிட்டது. கடைசிக் காலத்தில் நடக்க இருப்பன மகா கொடியனவாய் இருக்கும்.
 
"
கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.

எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,

சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,

துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு".

II தீமோத்தேயு 3 :1 -5
 

சுபாவ அன்பை பற்றி பவுல் திமோத்தேயுவுக்கு எழுதுகிறார். ஒரு மனிதனிடத்தில் சுபாவ அன்பில்லா விட்டால் அவனுக்குள் விரோதம், பொறாமை, மற்றும் மேலே வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாத் தீய குணங்களும் தான் இருக்கும்.
 

இன்று சகோதர சகோதரிகளுக்குள்ளே சொத்து பணம் நகை என்று எதற்கெடுத்தாலும் சண்டை.
 

ஒரு இரண்டு வயது குழந்தைக்கு தன் புதிதாய் பிறந்த தம்பியை பார்த்தால் பிடிக்கவில்லை. அவனை கிள்ளி அடிக்கிறாள். இப்படி ஆரம்பிக்கிற பொறாமை சகோதர துவேஷத்தை(sibling rivalry) கொண்டுவருகிறது. ஏன்? சுபாவ அன்பில்லை.
 

ஒரு சகோதரன் தன் தங்கையின் கணவனின் மேலே பணத்திற்காக வழக்கு தொடுக்கிறார். சகோதரியின் கணவனை மதித்து அன்பு செய்ய வேண்டிய இடத்தில விரோதம்.
 

திருமணம் செய்த தன் மனைவிக்கு அவளுக்கு உரிய உரிமையை கொடுத்து வாழ விடாமல் தன் தாய்க்கும் சகோதரிக்கும் சாதகமாய் நடந்து வீட்டிற்கு ஆசைகளோடும் கனவுகளோடும் வந்த பெண்ணை தற்பிரியதிற்காய் கொடுமைப்படுத்தும் அவலம்.
 

சகோதரர்கள் ஒருமித்து வாழ்வதை ஆண்டவர் விரும்புகிறார். அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
 

சகோதர்கள் பிரிந்திருந்து விட்டு அவனை விட நான் பணக்காரனாயும்,என் பிள்ளைகள் படித்தவர்களாகவும், என் மனைவி நிறைய நகை அணிந்தவளாயும், எனக்கு சமூகத்தில் அதிக மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும் நினைப்பது மதியீனம். ஏனெனில் வேதாகமம் நமக்கு அப்படி சொல்லவில்லை. சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும் போது தான் ஆசிர்வாதம் கிடைக்கும்.
 

ஒன்றாய் தொழில் செய்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் செழிப்பாய், அசைக்க முடியாதப்படி இருந்தார்கள். என்று பிரிந்தார்களோ, அன்றிலிருந்து போட்டியும் பொறாமையும். இன்று இரண்டு பேரும் பொது இடத்தில் பார்த்து கொண்டால் கூட, எதிரிகள் போல் முகத்தை திருப்பிகொள்ளுகிறார்கள். தொலைக்காட்சியில் அவர்களின் காரசாரமான அவதூறு விவாதங்களை பார்பதற்கே நமக்கு எரிச்சல் வருகிறது. சகோதரர்களின் அன்பின்மையை தொலைக்காட்சி பணமாக்குகிறது.
 

பணமா வாழ்க்கை? புகழா பெருமை? ஒரே தாய் தகப்பனின் பிள்ளைகள் இப்படி இருந்தால், மற்றவர்களை அன்பு செய்வது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத கற்பனை கதை தான்!
 

ஒரு பெண் தன் கணவர் வீட்டாரோடு ஒருவரையும் அண்ட விடுவதில்லை. வயதான காலத்தில் தன் கணவரை இழந்த நிலையில், நோய்வாய்ப்பட்டு யாரவது தன்னை பார்க்க வர மாட்டர்கள என்ற ஏக்கம் வரும்போது, யார் வருவார்கள்? இன்று தனிமையில் தன் பாவத்தை நினைத்து மனம் வருந்துகிறார். எதை நாம் விதைக்கிறோமோ அதையே அறுப்போம். மாங்காயை விதைத்தால் மாங்காய் தான் கிடைக்கும். கொமட்டிக்காயை விதைத்தால் கொமட்டிக்காய் தான் கிடைக்கும்,
 

என் சகோதரன் எனக்கு விரோதமாய் பாவம் செய்து விட்டான், நான் எப்படி அவனை மன்னிக்க முடியும் என்றால், நீங்கள் உலக ஆசிர்வாதங்களையும் பரலோகத்தின் வீட்டையும் இழந்து போவது நிச்சயம் உறுதி.
 

ஒரு மனிதன் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த நாட்களில் பலர் அவருக்கு விரோதமான காரியங்களை செய்தார்கள். அவரால் அவர்களை மன்னிக்க முடியவில்லை. திடீரென்று ஒரு நாள் ஒரு கொடிய நோயால் தாக்கப்பட்டு மரண தருவாயில் நின்றார். நிச்சயம் ஆண்டவர் அவரோடு பேசியிருக்க வேண்டும். அவர் யார் யாரோடெல்லாம் சமாதானமாய் இல்லையோ அவர்கள் எல்லாரிடமும் சமாதானம் ஆனார். தன் மனைவியின் அண்ணன் பல வருடங்கள் அவரோடு பேசவில்லை. மரண தருவாயில் இருந்த அவர் அவரை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவரோடு சமாதானம் ஆகி அவரை மன்னித்தார். அடுத்த நாளே அவர் இறந்து போனார். அன்று சரியான நேரத்தில் மன்னிக்காமல் இருந்திருந்தால், மீட்பு கிடைத்திருக்குமா?இது தான் கிறிஸ்து வழங்கும் மன்னிப்பு. இது தான் சகோதர குணம்.
 

ஒரு மனிதன் இருந்தார். அவர் ஊருக்கெல்லாம் நல்ல பிள்ளை. ஆனால் தன் சொந்த சகோதர சகோதரிகளை அன்பு செய்து வாழ தெரியவில்லை.
 

ஒரு பெண். அவருக்கு குழந்தை இல்லை. கணவர் நன்றாய் சம்பாதிக்கிறார். பலருக்கு உதவி செய்கிறார். பல நேரங்களில் கஷ்டப்படும் தன் சகோதரிகளுக்கு உதவி செய்வார். கேட்டால்...என் சொந்த சகோதரிகள் கஷ்டப்படும் போது அடுத்தவர்களுக்கு நான் கொடுப்பதால் பயன் என்ன?ஆச்சரியமான பதில்!
 

"
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்". மத்தேயு 5 :9
 
இன்று நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுடன் மனவருத்தத்தில் இருந்தால் அவர்களுடன் சமாதானம் ஆகி அவர்களை மனதார அன்பு செய்யுங்கள். நீங்கள் பேறுப்பெற்றவர்கள் ஆவீர்கள்.
 

"
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,

அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்".

மத்தேயு 5 :22 -26
 

உங்களிடம் நிச்சயமாய் ஒரு செல்போன் இருக்கும். யார் யாரோடு மனவருத்தம் இருக்கிறதோ, ஒரு தடவை அழைத்து பேசுங்கள். அவர்கள் தவறு பண்ணி இருந்தாலும் சரி. அப்பொழுது ஆண்டவர் சொல்வார் "சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது".
 
இயேசு வழங்கும் சமாதானம் உங்களோடு இருப்பதாக!
 

வாசிப்பவர்கள்
இயேசுவை அறிய,
திருமதி
. ஷர்லீனா பிரதீப்

View user profile

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum