இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

குழந்தை இயேசு

Go down  Message [Page 1 of 1]

1குழந்தை இயேசு Empty குழந்தை இயேசு on Mon Mar 14, 2011 8:56 pm


குழந்தை இயேசுகுழந்தை இயேசு வரலாறு
வரலாற்றின் அடிப்படையில் பிரேகுநகர் குழந்தை இயேசுவின் திருசுரூபம் ஸ்பெயின் அரச குடும்பத்தின் பரம்பரை சொத்து.
போலிக்சேனா லோகோவிட்ஸ் இளவரசிக்கு கலியாணப் பரிசாக வந்தடைந்தது. 1623ல்
விதவையான இளவரசி, எஞ்சிய தன் வாழ்நாட்களை பக்தி வழியிலும், பிறர் அன்பு
பணியிலும் கழிக்க உறுதிபூண்டாள். அன்று வறுமையில் வாடிய கார்மல்சபை
துறவியருக்கு, தானமாக பாலன் இயேசு சுரூபத்தைத் தந்தாள், கொடுக்கும் போது
அவள் கூறியது இறைவாக்கென அமைந்து விட்டது: உலகிலேயே மிக மிக உயர்வாக நான்
மதித்து, போற்றும் தன்னிகரில்லா தனிப்பெரும் செல்வம் இத்திருச்சுரூபம்.
" குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள், குறை என்பதே இனி உங்களுக்கு இருக்காது".
நன்றியுடன் அத்திருச் சுரூபத்தைப் பெற்றுக் கொண்ட துறவியர் தங்கள் குரு
மாணவரின் ஆசிரமத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அம்மடத்தை இறைவன்
ஆசீர்வதித்தார். அச்சபையும் ஆன்ம சரீர நலன்களால் நல்ல முன்னேற்றம் கண்டது.
உள்ளத்தையும் உடலையும் தொல்லைகள் பல தாக்கிய போதெல்லாம், இத்திருச்சுரூபம்
இருந்த சிறுகோவில் அந்தத்துறவியர்க்கெல்லாம் அடைக்கலமும், ஆறுதலும் அளித்து
வந்தது. அவர்களுள் பெரும்பக்தராக இருந்தவர் தவத்திரு தந்தை சிரிலஸ்.
கி.பி.1630 ம் ஆண்டில் முப்பது ஆண்டு கடும்போரின் (Thirty years war)
காரணமாக, தூய கார்மேல் சபையின் குரு மாணவரின் ஆசிரமம் முனிக் நகருக்கு
மாற்றலாகியது. போர் முடிந்து ஊரைவிட்டுப் பகைவர்கள் வெளியேறிய பின் முனிக்
நகரிலிருந்து தந்தை சிரிலஸ் பிரேகு நகர மடத்திற்கு அனுப்பப்பட்டார். அவரும்
அங்கு சென்று, ஆரம்பத்திலே வழிபட்டுவந்த அதே சிறுகோவிலிலே குழந்தை
இயேசுவின் திருச்சுரூபம் நிறுவச்செய்தார். அச்சமயம் அத்திருச்சுரூபம் உரு
சிதைந்து இருப்பதைக்கண்டு கண்ணீர் சிந்தினார்.
சிதைந்திருந்த அந்த சுரூபத்தின் முன் மெய்மறந்து மன்றாடி நின்ற வேளை குரலொன்று அதிசயமாக தெளிவாக அவருக்கு கேட்ட சொற்கள் இவை~
"என் மேல் இரக்கமாயிரு.
நானும் உன் மீது இரக்கம் கொள்வேன்.
என் கைகளை எனக்குக்கொடு
உனக்கு நான் அமைதி அருள்வேன்".
அக்குரலை ஒரு கட்டளையாக ஏற்று செயல்பட முனைந்தார் தந்தை சிரிலஸ். கடும்
நோயாளி ஒருவர் சிதைந்திருந்த சுரூபத்தைச் சரிசெய்ய நன்கொடை அளித்தார்,
ஆனால் துறவியரோ அன்று கேட்ட அந்த அதிசயக் குரலின் திட்டவட்டமான கட்டளைக்கு
மாறாக: புத்தம் புதிய சுரூபத்தை வாங்கி கோவிலில் வைத்தார். திடீரென்று
விளக்குத் தண்டு ஒன்று அந்த சுரூபத்தின் மேல் விழுந்து சுக்குநூறாக
உடைந்தது மல்லாமல், துறவியரும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு,
பொறுப்பிலிருந்தும் விலகி கொண்டார். பழைய தன் திருச்சுரூபத்தை அலட்சியமாக
ஒதுக்கிவிட்டது குழந்தை இயேசுவுக்கு பிடிக்கவில்லையென்பது இதனால்
புலனாயிற்று.

தந்தை சிரிலசுக்குப் பின் பதவியேற்ற துறவியார், தான் பெற்ற இன்னொரு
நன்கொடையைப் பயன்படுத்தி பழைய திருச்சுரூபத்தை சரிசெய்தார். குழந்தை
இயேசுவும் தம் மகிழ்ச்சியை ஓர் புதுமையின் வழியாக வெளிப்படுத்தினார்.
அச்சமயம் அந்நகர மக்களை விழுங்கி வந்த பயங்கரத் தொற்றுநோய் துறவியரையும்
தாக்கியது. நோய் நீங்கி மீண்டும் நலமுடன் எழுந்தால்
அத்திருச்சுரூபத்தின்முன் ஒன்பது நாட்கள் தொடர்ந்து திருப்பலி
ஒப்புக்கொடுப்பதாக உறுதிகொண்டார். அதன்படியே, அற்புதமாக அவர் குணமடைந்தார்.
அவரும் தம் நேர்ச்சைக்கடனை நிறைவேற்றினார். அத்துடன் குழந்தை இயேசுவின்
பக்தி வழியாக பொதுமக்களும் பயன்பெற வேண்டுமெனத் தம் மடத்தின் அருகிலிருந்த
கோவிலில் சிறப்புமிக்கதொரு தனியிடத்தை அலங்கரித்து, அங்கே
இத்திருச்சுரூபத்தை நிறுவினார். அதன்பின் வரங்களும், அருட்கொடைகளும்
வழிந்தோடி, புதுமைகள் ப+த்துக்குலுங்கி, பிரேகு நகரெங்கும் இத்திரு
சுரூபத்தின் புகழ் பரவியது. குழந்தை இயேசுவின் பக்தியும் வளர்ந்து கொண்டே
வந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தம் பக்தகோடிகளுக்கு அவர்
ஆற்றிவரும் அற்புதங்களின் காரணமாக குழந்தை இயேசுவின் பக்தி பாரெங்கும்
இன்று பரவி நிற்கிறது.

View user profile http://www.kavikuyil.yolasite.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum